வேலியை சேதப்படுத்தி முதியவருக்கு கொலை மிரட்டல்


வேலியை சேதப்படுத்தி முதியவருக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 26 April 2022 12:30 AM IST (Updated: 25 April 2022 9:52 PM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி அருகே வலியை சேதப்படுத்தி முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொரடாச்சேரி:-

கொரடாச்சேரி அருகே உள்ள குளிக்கரை கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது62). அதே ஊரில் வசித்து வருபவர் முருகையன். இவர்கள் இருவருக்கும் இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று முருகையன் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு தேவதாஸ் வயலில் உள்ள இரும்பு கம்பி வேலியை சேதப்படுத்தி உள்ளார். மேலும் வயலுக்குள் நுழைந்து அங்கிருந்த தேவதாசை கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார். இதுதொடர்பாக தேவதாஸ் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் முருகையன், அவருடைய நண்பர்கள் முத்துதுரை, வீராச்சாமி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story