தூர்வாரும் பணிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்- காவிரி விவசாயிகள் சங்கம்


தூர்வாரும் பணிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்- காவிரி விவசாயிகள் சங்கம்
x
தினத்தந்தி 26 April 2022 12:15 AM IST (Updated: 25 April 2022 10:01 PM IST)
t-max-icont-min-icon

தூர்வாரும் பணிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

திருவாரூர்:-

தூர்வாரும் பணிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. 

சங்க கூட்டம்

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுப்பையன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆறு, வாய்க்கால் போன்ற நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளை ஏப்ரல் மாதமே தொடங்கியதும், மே 31-ந் தேதிக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருப்பதும் வரவேற்கத்தக்கது. பணிகள் தொடங்கும் இடத்தில் பணி விவரம் குறித்த முழு விளம்பர பதாகை வைக்க வேண்டும். 

விவசாயிகள் குழு

பணிகள் நடைபெறும் கிராமத்தில் விவசாயிகள் கொண்ட குழுக்களை அமைத்து கண்காணிக்க வேண்டும். ஊழல், முறைகேடின்றி 100 சதவீதம் தூர்வாரும் பணிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஸ் போன்ற உரங்களை பல மடங்கு விலையை உயர்த்தி விற்பனை செய்கிற நிலை தொடர்கிறது. 
குறிப்பாக உரக்கடைகள் ஒரு மூட்டை யூரியாவுடன் இடுபொருட்களை வாங்க வேண்டும் என விவசாயிகளை வற்புறுத்துகின்றனர். இதை தடுக்க வேளாண்மை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிர்ணயிக்கும் உரிய விலையில் உரங்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநில துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட கவுரவ தலைவர் செல்வராஜ் மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story