கொள்முதல் செய்யப்பட்ட நெல் பாதுகாக்கப்படுமா?- விவசாயிகள்
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வீணாகி வருகிறது. நெல்லை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
குடவாசல்:-
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வீணாகி வருகிறது. நெல்லை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
நெல் வீணாகும் அவலம்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டார பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் சம்பா, தாளடி அறுவடையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
தொடக்கத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து அரசின் கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் கடந்த ஒரு மாதமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கி கிடக்கின்றன. இந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வீணாகும் அவல நிலை உள்ளது.
பாதுகாக்க வேண்டும்
பல இடங்களில் நெல்மணிகள் முளைத்து வீணாகி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘அரசு கொள்முதல் நிலையங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நெல் வீணாகி வருவது வேதனை அளிக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் முறையாக பதில் தெரிவிப்பதில்லை.
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாக்க, முறைப்படி சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என்றனர்.
Related Tags :
Next Story