அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா


அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 25 April 2022 10:05 PM IST (Updated: 25 April 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

குத்தாலம், திருவெண்காடு அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

குத்தாலம்
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த தேரழுந்தூரில் புகழ் வாய்ந்த நெல்லியடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த 4-ந் தேதி பந்தக்கால் முகூர்த்தத்துடன் திருவிழா தொடங்கி தினமும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக வேதபுரீஸ்வரர் சன்னதியில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர், கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், தப்பாட்டம் மற்றும் சிவன்-பார்வதி, காளி ஆட்டம் உள்ளிட்டவை நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். 
திருவெண்காடு
இதேபோல, திருவெண்காடு அருகே உள்ள ராதாநல்லூரில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை காவிரி கரையிலிருந்து பக்தர்கள் கரகம், பால்குடம் மற்றும் பன்னீர் காவடி எடுத்து வந்து அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர், அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா காட்சி நடைபெற்றது.
மேலும், வானகிரி மீனவர் கிராமத்தில் அமைந்துள்ள ரேணுகா தேவி எல்லை அம்மன் கோவிலிலும் தீமிதி உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் வீதி உலா வருதல் மற்றும் இன்னிசை கச்சேரிகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

Next Story