பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்
கே.வி.குப்பம் அருகே பள்ளி மாணவியின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
வேலூர்
கே.வி.குப்பம் தாலுகா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 18 வயது நிரம்பாத பெண்ணிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வேலூர் மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன.
அதன்பேரில் சைல்டுலைன் ஊழியர்கள், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவைமைய ஊழியர்கள், பனமடங்கி போலீசார் அந்த கிராமத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த வடுகந்தாங்கலில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவிக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கொட்டாளத்தை சேர்ந்த 29 வயது வாலிபருக்கும் கொட்டாளத்தில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் நடைபெற இருந்தது தெரிய வந்தது.
அதையடுத்து பள்ளி மாணவியின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் மாணவியை மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள குழந்தைகள் நலகுழுமத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோரிடம் எழுதி வாங்கினர்.
Related Tags :
Next Story