முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மந்தாரக்குப்பம் அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
மந்தாரக்குப்பம்,
மந்தாரக்குப்பம் அருகே மேல்பாதி ஊராட்சியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹிதி உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து கும்பாபிஷேக நாளான நேற்று காலை 5 மணிக்கு கோபூஜை, மூல மூர்த்திகளுக்கு பிம்பசுத்தி, நாடிசந்தானம், ரக்ஷாபந்தனம் ஆகியவை நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து 10 மணிக்கு யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் கரும்பாய் வீரப்பன் தலைமை தாங்கினார். இதையடுத்து சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story