மேல்நாரியப்பனூர் துர்க்கை அம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


மேல்நாரியப்பனூர்  துர்க்கை அம்மன் கோவில் தேரோட்டம்  திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 25 April 2022 10:27 PM IST (Updated: 25 April 2022 10:27 PM IST)
t-max-icont-min-icon

மேல்நாரியப்பனூர் துர்க்கை அம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


சின்னசேலம்

சின்னசேலம் தாலுகா மேல்நாரியப்பனூர் கிராமத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் திருவிழா கடந்த 19-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து சக்தி அழைத்தல், ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது.விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. 

இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் பிள்ளையார், துர்க்கை மற்றும் அய்யனார் எழுந்தருளினர். இதையடுத்து சின்னசேலம் ஒன்றிய குழு தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில், கவுன்சிலர் சுதாமணி கண்டன் முன்னிலையில் பொதுமக்கள் வடம்பிடித்து முதலில் பிள்ளையார், அடுத்து துர்க்கை, அய்யனார் என 3 தேர்களையும் ஒன்றன் பின் ஒன்றாக இழுத்தனர். இந்த தேர்கள் முக்கிய தெருக்ககள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் மேல்நாரியப்பனூர் கிராம மக்கள், கிராம முக்கியஸ்தர்கள், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Next Story