குமாரபாளையத்தில் டிராக்டர் மோதி 3 மின்கம்பங்கள் சாய்ந்தன மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி
குமாரபாளையத்தில் டிராக்டர் மோதி 3 மின்கம்பங்கள் சாய்ந்தன மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி
குமாரபாளையம்:
சேலம் மாவட்டம் தேவூர் பகுதியில் இருந்து குமாரபாளையம் வழியாக பள்ளிபாளையத்தில் உள்ள பொன்னி தனியார் கரும்பு ஆலைக்கு தினந்தோறும் ஏராளமான லாரி, டிராக்டர்களில் கரும்பு பாரம் கொண்டு செல்லப்படுகிறது.
அதன்படி நேற்று இரவு 8 மணி அளவில் தேவூரில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி கொண்டு டிராக்டர் ஒன்று குமாரபாளையத்தில் உள்ள காவிரி நகர் பத்ரகாளியம்மன் கோவில் பகுதியில் வந்தது. அப்போது சாலையின் குறுக்கே தொங்கியபடி இருந்த மின்கம்பிகள் மீது டிராக்டர் உரசியதால் திடீரென சாலையோரமாக இருந்த 3 மின் கம்பங்கள் அடுத்தடுத்து கீழே சாய்ந்து விழுந்தன.
இதனால் டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டு மின்சாரம் தடைபட்டது. இதன் காரணமாக கிழக்கு காவிரி நகர், மேற்கு காவிரி நகர் பகுதியில் உள்ள சுமார் ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து மின்வாரிய அதிகாரிகள், பணியாளர்கள் அங்கு விரைந்து சென்று புதிய மின்கம்பம் நட்டு மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மின்சாரம் துண்டிப்பால் அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்தனர்.
Related Tags :
Next Story