திருக்கோவிலூர் அருகே முடியனூர் கிராம ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை
திருக்கோவிலூர் அருகே முடியனூர் கிராம ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள டி.முடியனூர் கிராம மக்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
டி.முடியனூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 28 ஹெக்டேர்(70 ஏக்கர்) பரப்பளவிலான ஏரி உள்ளது. இதில் தற்போது சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதில் விவசாயம் நடைபெற்று வருகிறது. மேலும் சிலர் ஏரிக்கரையில் வீடுகளும் கட்டி உள்ளனர். இதனால் ஏரியின் நீர்ப்பிடிப்பு அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே டி.முடியனூர் கிராமத்தில் உள்ள ஏரியை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, ஏரியின் பல்வேறு பகுதிகளில் உள்ள முட்புதர்களையும் அகற்றி அதிக அளவு நீர்பிடிக்கும் வகையில் ஏரியை ஆழப்படுத்தி தர வேண்டும். இதன் மூலம் ஏரியை நம்பி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story