விழுப்புரத்தில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 April 2022 10:37 PM IST (Updated: 25 April 2022 10:37 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


விழுப்புரம், 

விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதற்கு சம்மேளன செயலாளர் குப்புசாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாநில துணைத்தலைவர் அம்பிகாபதி, அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் பன்னீர்செல்வம், பொறியாளர் சங்க வட்ட செயலாளர் முருகன், பொறியாளர் கழக வட்ட செயலாளர் சரநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 


சரண்டர், வீடு, கம்ப்யூட்டர், வாகனம், கல்வி கடன்கள், அகவிலைப்படி உள்பட அனைத்து சலுகைகளையும் வழங்க மறுக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும், 

வேலைப்பளு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிரிவுகளுக்கு மின் இணைப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் வட்டங்கள் மற்றும் மண்டலங்களை உருவாக்குவது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் கலந்துபேசி தீர்வு காண வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதில் ஐ.என்.டி.யூ.சி. நடராஜன், தெய்வநாயகம், அம்பேத்கர் எம்ப்ளாயிஸ் யூனியன் கணேஷ், எம்ப்ளாயிஸ் பெடரேஷன் ரியாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சி.ஐ.டி.யூ. திட்ட செயலாளர் சேகர் நன்றி கூறினார்.

Next Story