குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
x
தினத்தந்தி 25 April 2022 10:37 PM IST (Updated: 25 April 2022 10:37 PM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே, பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு ெகாண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணல்மேடு
மணல்மேடு அருகே, பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு ெகாண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் தொட்டி
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்த அழகன்தோப்பு மெயின் ரோடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு இங்கு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. 
இ்ந்த குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்காக அதன்அருகே மின்மோட்டாரும் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
பயன்பாட்டுக்கு கொண்டு வர...
ஆனால், மின் மோட்டார் திடீரென பழுதடைந்ததால் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை. தற்போது வெயில் கடுமையாக வாட்டி வதைப்பதால் தண்ணீர் தேவைப்பாடு அதிகமாக இருக்கிறது.
ஆகவே, பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து இந்த குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story