தேக்கு மரங்கள் வெட்டி கடத்தல்
கோவில் நிலத்தில் இருந்த தேக்கு மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை நடராஜர் கோவிலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நாச்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலம், பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் மருதாநதி ரோட்டில் உள்ளது.
இந்து சமய அறநிலையத்துக்குறைக்கு சொந்தமான அந்த நிலத்தில் நின்றிருந்த, ரூ.3 லட்சம் மதிப்பிலான 36 தேக்கு மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில், நிலக்கோட்டை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ராமதிலகம் புகார் அளித்தார். அதன்பேரில் தேக்கு மரங்களை வெட்டி கடத்தியதாக கடலூர் மாவட்டம் மழவராயநல்லூரை சேர்ந்த ராஜாராமன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story