கோவில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருட்டு
கோவில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சி மூர்த்தியூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. பொன்னேரி கிராமத்தில் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி அலமேலு (வயது 61). இவர் ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி கிராமத்தில் நடைபெற்ற வேடியப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க சென்றார்.
விழாவில் அருகில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது கூட்ட நெரிசலில் மூதாட்டி அலமேலு கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் யாரோ திருடிச் சென்று உள்ளனர்.
இது குறித்து அலமேலு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story