திருத்துறைப்பூண்டிக்கு புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கம்
ஆயக்காரன்புலத்தில் இருந்து கரியாப்பட்டினம் வழியாக திருத்துறைப்பூண்டிக்கு புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டது.
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலத்தில் இருந்து கரியாப்பட்டினம் வழியாக திருத்துறைப்பூண்டிக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தலைமை தாங்கி பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக கூட்டுறவு வங்கி இயக்குனர் உதயம் முருகையன் வரவேற்றார்.முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம், நகர்மன்ற தலைவர் புகழேந்தி, மாவட்ட கவுன்சிலர் சோழன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் துரைராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் போக்குவரத்து கழக மேலாளர்கள் சிதம்பர குமார், சுரேஷ்குமார், நடராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தி ஊராட்சி மன்ற தலைவர் ராமையன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story