முன்விரோத தகராறில் கார் கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் வாலிபர் கைது
முன்விரோத தகராறில் கார் கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் வாலிபர் கைது
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கவரை தெருவை சேர்ந்தவர் கருப்பன் மகன் சந்துரு(வயது 20). இவருக்கும் ராஜபுத்திரர் தெருவில் வசிக்கும் ராஜா மகன் விக்னேஷ்(27) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சந்துரு நேற்று முன்தினம் இரவு கவரை தெருவில் உள்ள பழைய இரும்பு கடை முன்பு அந்த கடையின் உரிமையாளர் மணிகண்டனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விக்னேஷ் ஆபாசமாக திட்டி அருகில் கிடந்த கட்டையை எடுத்து சந்துருவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், மணிகண்டனின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சந்துரு கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story