அரக்கோணம் பகுதியில் 7 மணிநேரம் மின்தடையால் மாணவர்கள் அவதி
அரக்கோணம் பகுதியில் 7 மணி நேர மின்தடை காரணமாக மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிக்குள்ளாகிறார்கள்.
அரக்கோணம்
அரக்கோணம் பகுதியில் 7 மணி நேர மின்தடை காரணமாக மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிக்குள்ளாகிறார்கள்.
7 மணிநேரம் மின்தடை
அரக்கோணம் இச்சிபுத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அரக்கோணம் நகர பகுதிகளாக விரிவடைந்து வரும் நாகாலம்மன் நகர், கைனூர், வடமாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக எவ்வித முன் அறிவிப்புமின்றி தினசரி 2 மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது. மின்தடை ஏற்பட்டு 7 மணி நேரம் ஆகியும் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது.
இந்த துணைமின் நிலையத்தில் இருந்து இச்சிபுத்தூர், ஈசலாபுரம், தணிகைபோளூர், வாணியம்பேட்டை, வடமாம்பாக்கம், உளியம்பாக்கம், வளர்புரம், தண்டலம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு மின்சாரம் செல்லவதால் விவசாயத்துக்கான மின்சாரமும் தடைபடுகிறது. பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில், இந்த மின் தடையால் கிராமபுற மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து அந்தப்பகுதி மக்கள் கூறியதாவது:-
மாணவர்கள் அவதி
மாதந்திர பராமரிப்புக்காக காலை முதல் மாலை வரை மின் தடை ஏற்படும் நிலையில் தினமும் முன் அறிவிப்பின்றி இது போன்று மின் தடையை ஏற்படுத்துகின்றனர். மின்வெட்டு குறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், நகர பகுதிகளில் மின்தடை ஏற்படுவதில்லை, கிராம பகுதிகளில் துணை மின் நிலையத்திற்கு வரும் மின்சாரத்தை மின் தடை செய்ய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறுகின்றனர். மாணவர்களுக்கு தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் மின் தடையால் படிக்க முடியாமல் மன உளைச்சளுக்கு ஆளாகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story