பென்னாகரம் அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பென்னாகரம் அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நூலஅள்ளி பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ். தச்சு தொழிலாளி. இவருக்கும், கூத்தப்பாடியை சேர்ந்த கனிமொழி (வயது 20) என்பவருக்கும் கடந்த மாதம் 16-ந்தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கனிமொழி நேற்று தனது பெற்றோர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஒகேனக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கனிெமாழியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story