தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாநில தலைவர் லாசர், மாவட்ட செயலாளர் முத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் குமார், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் கிரைஸாமேரி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 150 நாட்கள் பணி வழங்கவேண்டும். தினக்கூலி ரூ.300 என அறிவித்ததை தமிழக அரசு உடனே அமல்படுத்த வேண்டும். மாவட்டத்தில் அனைத்து பேரூராட்சிகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
கோஷங்கள்
இந்த திட்டப்பணி நடக்கும் இடங்களில் நிழற்கூடம், மருத்துவ வசதி, குடிநீர் வசதி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் முருகன், கோவிந்தசாமி மற்றும் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story