தென்கரைக்கோட்டை அருகே பள்ளி குழந்தைகளுடன் பெற்றோர் தர்ணா
தென்கரைக்கோட்டை அருகே பள்ளி குழந்தைகளுடன் பெற்றோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர்:
தர்மபுரி மாவட்டம் தென்கரைக்கோட்டை ஊராட்சி வடகரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 129 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் தேர்வு நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு தேர்வு தொடர்பாக இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று ஒரு தரப்பை சேர்ந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் பள்ளியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக கோபிநாதம்பட்டி போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
Related Tags :
Next Story