பெண்கள் குளித்ததை மறைந்திருந்து பார்த்த 2 வாலிபர்கள் கைது


பெண்கள் குளித்ததை மறைந்திருந்து பார்த்த 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 25 April 2022 11:17 PM IST (Updated: 25 April 2022 11:17 PM IST)
t-max-icont-min-icon

கலவை அருகே பெண்கள் குளித்ததை மறைந்திருந்து பார்த்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கலவை

கலவை தாலுகா பரிக்கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் நவீன்அரசு (வயது 25). அதே ஊரைச் சேர்ந்த பிச்சாண்டியின் மகன் செல்லபாண்டியன் (30). இருவரும் சேர்ந்து அங்குள்ள ஒரு மாமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுவது வழக்கம்.

அப்போது, அந்தப் பகுதியில் வசிக்கும் 47 வயது ெபண்ணும், அவரின் மருமகளும் குளியல் அறைக்கு சென்று குளிப்பதை மேற்கண்ட வாலிபர்கள் அங்கு மறைந்திருந்து எட்டிப்பார்ப்பதும், சினிமா பாட்டுகளை பாடுவதும், சிறு சிறு கற்களை எடுத்து வீசி அடிப்பதுமாக இருந்து வந்தனர். 

அவர்களின் தகாத செயல்களை பெண் தட்டிக் கேட்டால் நீங்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது, நீங்கள் குளிப்பதை வீடியோவாக படம் பிடித்து வைத்துள்ேளாம். நீங்கள் குளிக்கும் காட்சிைய யூடியூப்பில் பதிவிட்டு விடுவோம், எனக் கூறி மிரட்டி வந்துள்ளனர்.

இதனால் மனவேதனை அடைந்த ெபண் கலவை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணமுர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்அரசு, செல்லபாண்டியன் ஆகியோரை கைது செய்து அரக்கோணம் கிைளச்சிறையில் அடைத்தனர்.

Next Story