மேல் விஷாரத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
மேல் விஷாரத்தில் நடந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி கலந்துகொண்டார்.
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் தி.மு.க. சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜனாப் சவுகார் முன்னாபாய் தலைமை தாங்கினார். மேல்விஷாரம் நகர தி.மு.க. செயலாளரும், நகர மன்றத் தலைவருமான எஸ். டி.முஹம்மத் அமீன் முன்னிலை வகித்தார். மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவு அமைப்பாளர் அப்துல்லா மாஷா வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு நோன்பு திறப்பு நிகழ்ச்சியை நடத்தினார். நிகழ்ச்சியில் ஆற்காடு தொகுதி ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., சுற்றுச்சூழல் அணி மாநிலத் துணைச் செயலாளர் ஜி.வினோத் காந்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story