சிறப்பு கிராம சபை கூட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 25 April 2022 11:55 PM IST (Updated: 25 April 2022 11:55 PM IST)
t-max-icont-min-icon

சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

கிருஷ்ணராயபுரம், 
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் சிறப்பு கிராம சபைகூட்டங்கள் நடைபெற்றது. கருப்பத்தூர் ஊராட்சி சார்பாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் ரெங்கம்மாள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வாழ்வாதாரம் நிறைந்த வறுமை அற்ற கிராமம், நோயற்ற கிராமம், குழந்தைகள் நேய ஊராட்சி, நீர் நிறைந்த கிராமம். பசுமையான கிராமம், அடிப்படை வசதிகள் தன்னிறைவு பெற்ற கிராமம் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் கூட்டுப் பொருளாக வைக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கருப்பையா, கவுன்சிலர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் சிதம்பரம் நன்றி கூறினார். இதேபோல கள்ளப்பள்ளி, பிள்ளபாளையம், வயலூர், பஞ்சப்பட்டி, சிவாயம் உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் சிறப்பு கிராம சபைக்கூட்டங்கள் நடைபெற்றது.
இதேபோல் தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பொருந்தலூர் ஊராட்சியில் தலைவர் சத்யா ராமச்சந்திரன், கழுகூர் ஊராட்சியில் தலைவர் முத்துசாமி, நாகனூர் ஊராட்சியில் தலைவர் லதா ராஜா, சின்னியம்பாளையம் ஊராட்சியில் தலைவர் பழனிச்சாமி, கூடலூர் ஊராட்சியில் தலைவர் அடைக்கலம், பில்லூர் ஊராட்சியில் தலைவர் லட்சுமி, தோகைமலை ஊராட்சியில் தலைவர் தனமாலினிகந்தசாமி, ஆலத்தூர் ஊராட்சியில் தலைவர் ஜெயபால், வடசேரி ஊராட்சியில் தலைவர் சரவணன் ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஊராட்சிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தோைகமலை ஒன்றிய குழு தலைவர் லதா ரெங்கசாமி, ஒன்றிய ஆணையர் சரவணன், தோகைமலை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். 


Next Story