வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு
வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.
நொய்யல்,
நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை, கோம்பு பாளையம், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நஞ்சைபுகளூர் பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வாழைகளை பயிரிட்டு வருகின்றனர். வாழைதார்கள் முதிர்ச்சி அடையும் தருவாயில் உள்ள போது விவசாயிகள் வாழைத்தார்களை வெட்டி வியாபாரிகளுக்கும், பரமத்திவேலூரில் செயல்பட்டுவரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.300-க்கும், ரஸ்தாளி ரூ.250-க்கும், பச்சை நாடன்நாடன் ரூ.150-க்கும், கற்பூரவல்லி ரூ.250-க்கும் விற்பனையானது. இந்த வாரம் பூவன் வாழைத்தார் ரூ.350-க்கும், பச்சநாடன் ரூ.200-க்கும், கற்பூரவல்லி ரூ.300-க்கும், ரஸ்தாளி ரூ.300-க்கும், மொந்தன் ரூ.300 க்கும் விற்பனையானது. வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story