மது விற்ற 3 பேர் கைது
மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
குளித்தலை,
குளித்தலை அருகே உள்ள குப்புரெட்டிப்பட்டி பாலம் மற்றும் வை.புதூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மது விற்ற குளித்தலை அருகே உள்ள அய்யனூர் பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது 63), வை.புதூர் பகுதியை சேர்ந்த கரிகாலன் (53) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டன.
கடவூர் வட்டம், சீத்தப்பட்டி பகுதியில் சிந்தாமணிபட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சீத்தப்பட்டி டாஸ்மாக் அருகே மது விற்று கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை சேர்ந்த ராஜாவை (30) போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 6 மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story