தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் காட்டாம்புதூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் வகையில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாததால் இப்பகுதியில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், காட்டாம்புதூர், கரூர்.
பயனற்ற நூலகம்
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள மரவாபாளையத்தில் அப்பகுதி வாசகர்களின் நலன் கருதி தார் சாலையின் ஓரத்தில் புதிதாக நூலகம் கட்டப்பட்டது. இந்த நூலகத்தில் பல்வேறு நூல்களும் உள்ளன. தினசரி நாளிதழ்களும் வாங்கி வைக்கப்பட்டது. இதனால் மரவாபாளையம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த வாசகர்கள் தினமும் நூலகத்திற்கு சென்று தினசரி நாளிதழ்களையும், தங்களுக்கு தேவையான நூல்களை எடுத்து படித்தும் வந்தனர். இந்நிலையில் நூலகம் தொடர்ந்து சில ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி வாசகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மரவாபாளையம், கரூர்.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் மயானத்தை சுற்றி தேவையற்ற கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு வருவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தபகுதி வழியாக திருவானைக்காவல் சாலைக்கு செல்ல சாலை போடப்பட்டுள்ளதால் இந்த வழியாக தினமும் ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர். அப்போது துர்நாற்றம் வீசுவதினால் அவர்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாலசுப்பிரமணியம், ஸ்ரீரங்கம், திருச்சி.
அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதி
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தாலுகா, பழங்குடி சாலையில் உள்ள பூலாங்குடி காலனி ஹாப்பி நகர் 7-வது தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தார் சாலை வசதி இல்லாமல் மண் சாலையாக உள்ளதால் மழை பெய்யும்போது இப்பகுதி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மேலும் இப்பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் இப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தெரு விளக்கு வசதியும் இல்லாததால் இரவு நேரத்தில் பெண்கள் சாலையில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பூலாங்குடி காலனி, திருச்சி.
சாலையை ஆக்கிரமித்துள்ள குழாய்கள்
திருச்சி மாநகராட்சி 14-வது வார்டு புகழியா பிள்ளை தெருவில் சாலையை ஆக்கிரமித்து குழாய்கள் போடப்பட்டுள்ளன. இதனால் அவ்வழியே வாகனங்கள் செல்லும் போது நடந்து செல்வோர் சாலை ஓரம் ஒதுங்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுவாமிநாதன், திருச்சி.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை வடகாபுத்தூரில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. அதனை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வடகாபுத்தூர், திருச்சி.
சாலையை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்கள்
திருச்சி மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சாண்டார் கோவில் ரெயில் நிலையம் செல்லும் வழி மற்றும் ரமேஷ்கார்டன் குடியிருப்பு பகுதியில் சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் முளைத்து புதர் மண்டி உள்ளன. இதனால் இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் செல்பவர்கள் பெரிதும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதியில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பிச்சாண்டார் கோவில், திருச்சி.
சாக்கடையால் கடும் துர்நாற்றம்
திருச்சி செல்வநகர் 2-வது வீதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்லும் வகையில் சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் ஆங்காங்கே தூர்ந்து போன நிலையில் காணப்படுவதால் கழிவுநீர் செல்ல வழியின்றி உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காணாமல் போன இடத்தில் தூர்வாரி கழிவுநீர் வாய்க்காலை சரி செய்தனர். ஆனால் ஏற்கனவே தேங்கியுள்ள சாக்கடைகள் அப்புறப்படுத்தாமல் உள்ளன. இதனால் தூர்வாரியும் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நின்று அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், செல்வநகர், திருச்சி.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி தென்னூர் உழவர் சந்தை மற்றும் அண்ணாநகர் பகுதியில் இருந்து ஆழ்வார்தோப்பிற்கு செல்லும் குமிழிக்கரை சாலையின் இடது பக்கம் முழுவதும் குப்பைகள் சேமிக்கும் இடமாக மாற்றப்பட்டு சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. நகரத்தின் மையப் பகுதியில் இவ்வாறு குப்பை சேமிப்பதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், தென்னூர், திருச்சி.
Related Tags :
Next Story