மகாமாரியம்மன் கோவில் திருவிழா


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 26 April 2022 12:09 AM IST (Updated: 26 April 2022 12:09 AM IST)
t-max-icont-min-icon

மகாமாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது

நொய்யல், 
கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையத்தில் மகாமாரியம்மன் கோவில் திருவிழா பூச்சூடுதல் மற்றும் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இரவு அம்மன் சப்பரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வருகிற 1-ந்தேதி இரவு வடிசோறு நிகழ்ச்சியும், அதிகாலை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 2-ந்தேதி மதியம் அம்மன் சப்பரத்தில் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும்,  3-ந்தேதி கிடா வெட்டு பூஜை, மாவிளக்கு, பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், 4-ந்தேதி கம்பம் ஆற்றுக்கு செல்லுதல் நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடக்கிறது.


Next Story