பிடாரி அரசி அம்மன் கோவிலில் செடல் திருவிழா
கம்மாபுரம் அருகே பிடாரி அரசி அம்மன் கோவிலில் செடல் திருவிழா நடைபெற்றது.
கம்மாபுரம்,
கம்மாபுரம் அருகே இருப்பு பிடாரி அரசி அம்மன் கோவில் திருவிழா கடந்த 10-ம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் நேற்று முன்தினம் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று செடல் மற்றும் தேர் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், உடம்பில் அலகு குத்தியும் கோவிலை சுற்றி வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையடுத்து மாலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. இதில் இருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story