தலைமறைவான 6 பேர் சிவகங்கை கோர்ட்டில் சரண்


தலைமறைவான 6 பேர் சிவகங்கை கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 26 April 2022 12:18 AM IST (Updated: 26 April 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

கொலை முயற்சி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரும் சிவகங்கை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

சிவகங்கை, 

திருப்பத்தூர் அடுத்துள்ள குடிகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெயிலான் (வயது 48), ஆறுமுகம் (44), செல்வம் (33), சந்தோஷ் (32), முருகேசன் (40), அம்மாசி (68). இவர்கள் 6 பேர் மீதும் நாச்சியார்புரம் போலீசார் கடந்த 2015-ம் ஆண்டில் கொலை முயற்சி வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை சிவகங்கையில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரணை செய்த தலைமை குற்றவியல் நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தார் இந்த தீர்ப்பை எதிர்த்து 6 பேரும் மதுரையில் உள்ள ஐகோர்ட்டு கிளையில் மேல்முறையீடு செய்தனர். பின்னர் அவர்கள் 6 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் கீழ் கோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்து கடந்த 1-ந்தேதி ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. இந்த நிலையில் தண்டனை பெற்ற 6 பேரும் தலைமறைவாகி விட்டனர். இதை தொடர்ந்து இவர்களை நாச்சியார்புரம் போலீசார் தேடிவந்தனர்.இந்த நிலையில் இவர்கள் 6 பேரும் நேற்று சிவகங்கையில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.இவர்கள் 6 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி சுதாகர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இவர்கள் 6 பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story