இருசக்கர வாகனம் மோதி ஒருவர் சாவு


இருசக்கர வாகனம் மோதி ஒருவர் சாவு
x
தினத்தந்தி 26 April 2022 12:24 AM IST (Updated: 26 April 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

இருசக்கர வாகனம் மோதி ஒருவர் சாவு

ஆர்.எஸ்.மங்கலம்
ஆர்.எஸ்.மங்கலம் அருகே அ.மணக்குடி சுனாமி காலனியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 50). இவர் தனது வீட்டிற்கு பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பியபோது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் காளிதாஸ் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் இறந்தார். இதனையடுத்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அமீர்சுல்தான் மீது திருப்பாலைக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story