காவேரிப்பட்டணம் அருகே இருதரப்பினர் மோதல்; 5 பேர் மீது வழக்கு
காவேரிப்பட்டணம் அருகே இருதரப்பினர் மோதல்; 5 பேர் மீது வழக்கு
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே உள்ள தொட்டிபள்ளம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 45). இவர், சுரேஷ் (35) என்பவரிடம் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.7 லட்சத்திற்கு நிலம் வாங்கினார். ஆனால் நிலத்தை பத்திர பதிவு செய்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பெருமாள் பணத்தை திரும்ப கேட்டபோது சுரேஷ் தர முடியாது என கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இருதரப்பினரும் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சுரேஷ், அவரது மனைவி நிஷா (30), பெருமாள், மகேந்திரன், நடேசன் ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story