கிருஷ்ணகிரியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பழனி தலைமை தாங்கினார். விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சேகர், மாநிலக்குழு உறுப்பினர் கண்ணு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், லோக்சபாவில் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற போது, அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்திய போராட்டத்தின்போது உயிரிழந்த, 700 விவசாயிகளின் குடும்பத்திற்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் மீது பதிவு செய்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும். விவசாய பொருட்களுக்கு ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story