ஓசூரில் விஷம் குடித்து பெண் தற்கொலை
ஓசூரில் விஷம் குடித்து பெண் தற்கொலை
ஓசூர்:
ஓசூர் நியூ ஏ.எஸ்.டி.சி. அட்கோ அருகே வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், மகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த விஜயலட்சுமி, விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமான 5 ஆண்டில் பெண் இறந்துள்ளதால் இது குறித்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story