தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
செடி, கொடிகள் அகற்றப்படுமா?
தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி இ. பி காலனி விரிவாக்க பகுதியில் கெஜலெட்சுமி நகர், உடையார் நகர், மாதா நகர் மற்றும் வங்கிஊழியர் காலனி உள்ளது. இந்த பகுதிகளை இணைக்கும் மையப்பகுதியில் உள்ள இடத்தில் செடி, கொடிகள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் அடிக்கடி விஷப்பூச்சிகள் புகுந்துவிடுகிறது. இதனால் வீடுகளில் உள்ள பெண்கள், குழந்தைகள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். மேலும், செடி, கொடிகள் வளர்ந்துள்ள பகுதியில் சமூக விரோதிகள், மதுபிரியர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள், பொதுமக்கள் அந்த பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள செடி, கொடிகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், தஞ்சை.
Related Tags :
Next Story