அணைப்பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை


அணைப்பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை
x
தினத்தந்தி 26 April 2022 12:58 AM IST (Updated: 26 April 2022 12:58 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.
மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவிலில் நேற்று மாலை 4 மணி அளவில் மழை பெய்தது. மழையுடன் பலத்த காற்று வீசியதால் வடசேரி அசெம்பு ரோட்டில் நேற்று மாலையில் ஒரு வேப்பமரம் முறிந்து விழுந்தது. இதை அடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்றப்பட்டது. தகவல் அறிந்து அந்த பகுதி கவுன்சிலர் ஸ்ரீலிஜா விரைந்து வந்து அந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
நேற்று பிற்பகலில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதே போல் திருவட்டார், குலசேகரம், திருநந்திக்கரை, பொன்மனை, செருப்பாலூர், சுருள கோடு உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 304 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 238 கன அடி தண்ணீரும் வந்து கொண்டு இருக்கிறது.
மாம்பழத்துறையாற்றில் 19 மி.மீ. பதிவு
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக மாம்பழத்துறையாற்றில் 19 மி.மீ. மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மி.மீ. வருமாறு:-
பூதப்பாண்டி- 11.7, கன்னிமார்- 16.2, மயிலாடி- 10.7, நாகர்கோவில்- 14, பேச்சிப்பாறை- 8.8, புத்தன் அணை- 8, சுருளோடு- 3, தக்கலை- 17.3, குளச்சல்- 3, இரணியல்- 6.4, கோழிப்போர்விளை- 6, அடையாமடை- 3, முக்கடல் அணை- 18.9 என பதிவாகி இருந்தது.

Next Story