பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்தனர்.
கீரனூர்:
கீரனூர் அருகே சவுரியாப்பட்டினம் சுடுகாட்டு பகுதியில் உள்ள தோப்பில் பணம் வைத்து சூதாடுவதாக கீரனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலையரசன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சீத்தப்பட்டியை சேர்ந்த சக்திவேல் (வயது 52) திருச்சி வரகனேரியை சேர்ந்த சீனிவாசன் (54), எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த செந்தில்குமார் (36), பாலசுப்பிரமணியன் (44), குண்டூர் பர்மா காலனியை சேர்ந்த ராஜ்மோகன் (48) ஆகிய 5 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் 52 சீட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story