போலீசாரை பீர்பாட்டிலால் தாக்க முயன்ற 4 பேர் கைது
போலீசாரை பீர்பாட்டிலால் தாக்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாக்க முயற்சி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் (வயது 43), மணிகண்டம் அருகே உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்த கதிரவன் (31), ஜெயக்குமார் (40), வில்லியம் (53) ஆகியோர் மணிகண்டம் அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை அளுந்தூரில் உள்ள ஒரு சாலையோர உணவகத்தில் ஆபசவார்த்தைகளால் பேசி கொண்டு இருந்தனர்.
அப்போது, ரோந்து பணியில் இருந்த மணிகண்டம் போலீஸ்காரர் பாண்டியன் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சங்கரலிங்கம் பீர்பாட்டிலால் தாக்க முயன்றார். மேலும் 3 பேர் அவரை அவதூறாக பேசினர். இது குறித்த புகாரின் பேரில் மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தார்.

Related Tags :
Next Story