மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளன மாவட்ட தலைவர் ஆதிமூலம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் பத்மநாபன், சிவசுப்பிரமணியன், கலசலிங்கம், சந்திரன், தமிழ்நாடு மின்வாரிய பெடரேஷனின் மாநில தலைவர் மணிகண்டன் ஆகியோர் பேசினர். 1-12- 2019 முதல் வழங்கப்படவேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story