தஞ்சை பெரியகோவிலில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி


தஞ்சை பெரியகோவிலில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 26 April 2022 1:15 AM IST (Updated: 26 April 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

உலக யோகா தினத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி

தஞ்சாவூர்:
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தபால்துறை சார்பில் யோகா செய்வதால் ஏற்படும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்தியா முழுவதும் பாரம்பரிய சின்னங்கள் உள்ள 100 இடங்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.தமிழகத்தில் சென்னை, மகாபலிபுரம், கன்னியாகுமரி, மதுரை, கோவை, தஞ்சை ஆகிய 6 இடங்களில் யோகாசன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சையில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திருச்சி மத்திய மண்டல தபால் துறை இயக்குனர் ரவீந்திரன், தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தபால்துறை அதிகாரிகள், போஸ்ட் மாஸ்டர்கள், தொல்லியல் துறை அதிகாரிகள் தபால் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் யோகா மாஸ்டர் குப்புசாமி கலந்து கொண்டு யோகா கற்றுக் கொடுத்தார். 

Next Story