குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
குளச்சல்:
குளச்சல் பங்கு நிர்வாகம், அனைத்து தொழிலாளர் சங்கம், இயக்கங்கள் மற்றும் பங்கு மக்கள் சார்பில் குளச்சல் மீன்பிடி துறைமுகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசின் மீன் வள மசோதாவை மீனவர்களிடம் திணிக்கும் மீன் வளத்துறை அதிகாரிகளை கண்டித்தும், குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் சுகாதார சீர்கேட்டினை தடுத்திட கேட்டும், துறைமுகத்தில் டோக்கன் முறையை ரத்து செய்ய கோரியும், ஆண்டுதோறும் படகு உரிமை பதிவை புதுப்பிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்துக்கு பங்கு நிர்வாக குழு செயலாளர் வால்டர் தலைமை தாங்கினார். பங்குதந்தை மரிய செல்வன் வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் செயலாளர் தர்மராஜ், நிர்வாகிகள் ஜெயசீலன், ரெக்சன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், பங்கு மக்கள், துறைமுக வியாபாரிகள், ஏலக்காரர்கள், விசைப்படகு தொழிலாளர்கள் சங்கத்தினர் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story