டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 April 2022 1:21 AM IST (Updated: 26 April 2022 1:21 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஏப்.26-
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில், சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாநில செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகம் நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 19 ஆண்டுகளாக தொகுப்பூதியம் பெற்று வரும் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக்கில் மதுபானங்களை வழங்குவதற்கு பணம் இல்லாத பரிவர்த்தனை முறையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Next Story