6 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்


6 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 26 April 2022 1:22 AM IST (Updated: 26 April 2022 1:22 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே 6 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அருப்புக்கோட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் கடத்திவரப்பபட்ட 6 ரேஷன் அரிசி மூடைகளை வாகனங்களோடு ேபாலீசார் பறிமுதல் செய்தனர். 6 மூடைகளில் 360 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. ரேஷன் அரிசியை கடத்தியதாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா புளியங்குடியைச் சேர்ந்த ராஜமகேஷ் (வயது20), ராமநாதபுரம் மாவட்டம் வெள்ளக்கோட்டையைச் சேர்ந்த லிங்கநாதன் (48) மற்றும் அவரது மகன் வேல்முருகன்(21) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story