நிதி நிறுவனத்தில் பணம் மோசடி செய்தவர் கைது


நிதி நிறுவனத்தில் பணம் மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 26 April 2022 1:22 AM IST (Updated: 26 April 2022 1:22 AM IST)
t-max-icont-min-icon

நிதி நிறுவனத்தில் பணம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

வடக்கன்குளம்:

வடக்கன்குளம் பழவூர் அருகே உள்ள மாடன்பிள்ளை தர்மம் ஊரை சேர்ந்தவர் சிவலிங்கத்துரை (வயது 43), கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரபு (39), வடசேரியை சேர்ந்த காசிவிஸ்வநாதன் (42) ஆகிய 3 பேரும் கடந்த 2019-ம் ஆண்டு இருசக்கர வாகனத்திற்கு போலியாக வாகன பதிவுச்சான்று தயாரித்ததாக கூறப்படுகிறது. 

பின்னர் அதனை வெலிஞ்சிபுரம் தனியார் நிதிநிறுவனத்திடம் வைத்து மோசடியாக பணம் பெற்றுள்ளனர். இதுகுறித்து நிதிநிறுவன உரிமையாளர் சின்னபாபு கொடுத்த புகாரின்பேரில் பழவூர் போலீசார் விசாரணை நடத்தி பிரபுவை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

Next Story