மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 April 2022 1:29 AM IST (Updated: 26 April 2022 1:29 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பாளையங்கோட்டை தியாகராஜ நகர் மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று மாலை நடைபெற்றது. பஞ்சப்படி, ஓய்வூதியத்தை மறுக்கும் வாரிய ஆணையை கைவிட வேண்டும். புதிய பதவிகளை அனுமதிக்காமல் மறுபகிர்வு முறையை புகுத்தக்கூடாது. மின் இணைப்பு எண்ணிக்கை அடிப்படையில் புதிய பிரிவுகள், வட்டங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சி.ஐ.டி.யு. கந்தசாமி தலைமை தாங்கினார். தொழிற்சங்க நிர்வாகிகள் பீர்முகமது ஷா, வண்ணமுத்து, கார்த்திகேயன், முருகன், மாதவன், பழனிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story