தீக்குளிக்க முயன்ற தி.மு.க. தொண்டர்
தீக்குளிக்க முயன்ற தி.மு.க. தொண்டரை பாஜகவினர் மீட்டனர்.
மதுரை,
மதுரை தெப்பக்குளத்தை சேர்ந்தவர் திருஞானம் (வயது56). தி.மு.க. தொண்டர். இவர் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது கலெக்டர், மாற்றுத்திறனாளிகளிடம் மனு வாங்கி கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் திருஞானம் தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தன் மீது ஊற்ற தொடங்கினார். அப்போது அந்த சமயத்தில் பா.ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் பா.ஜனதா கட்சியினர் அங்கு வந்திருந்தனர். அவர்கள் உடனடியாக திருஞானத்திடம் இருந்து பாட்டிலை பறித்து வெளியே அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் திருஞானம் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். தொடர்ந்து போலீசார் திருஞானத்தை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர், தனது மகனுக்கு கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் வேலை பார்க்கும் ஒரு பெண் ரூ.3 லட்சம் வாங்கி விட்டு ஏமாற்றி விட்டார். எனவே வேறு வழியில்லாமல் தீக்குளிக்க முயற்சித்தேன் என்று கூறினார்.
Related Tags :
Next Story