ரெயில்வே பெண் ஊழியரை தாக்கியவர் மீது வழக்கு
ரெயில்வே பெண் ஊழியரை தாக்கியவர் மீது வழக்கு
திருச்சி காஜாமலை எல்.எஸ்.காலனியை சேர்ந்தவர் ராஜாத்தி (வயது 38). இவர் பொன்மலை ரெயில்வே பணிமனை டீசல் ஷெட்டில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் பொன்மலை அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரில், பொன்மலை ரெயில்வே பணிமனையில் மெக்கானிக் ஸ்டோரில் பணியாற்றி வரும் மருதுபாண்டி என்பவர் சம்பவத்தன்று தன்னை பணி இடத்திலும், வெளியேயும் இரட்டை அர்த்தங்களில் ஆபாச சைகை காட்டி வந்ததாகவும், எனது செல்போனை அவர் கேட்டபோது, கொடுக்க மறுத்ததால் என்னை தாக்கி கீழே தள்ளியதாகவும் கூறி இருந்தார். இந்தபுகார் குறித்து பொன்மலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story