பாவூர்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம்


பாவூர்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 April 2022 1:43 AM IST (Updated: 26 April 2022 1:43 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை விதிக்க கோரி பாவூர்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாவூர்சத்திரம்:

தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு மணல், ஜல்லி கற்கள், குண்டு கற்கள், எம்.சாண்ட் போன்ற கனிம வளங்களை கொண்டு செல்லக்கூடாது. அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, சமூக பாதுகாப்பு இயக்கங்கள் சார்பில், பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் தலைமை தாங்கினார்.

முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்டராஜா, காங்கிரஸ் முன்னாள் வட்டார தலைவர் சுப்ரமணியன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் உதயசூரியன், சமூக ஆர்வலர் விமல் ராமசாமி, தமிழ் புலிகள் அமைப்பு தமிழ்குமரன், நாம் தமிழர் கட்சி ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story