மாணவியின் படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட வாலிபர் கைது


மாணவியின் படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட வாலிபர் கைது
x

காதலை முறித்து கொண்டதால் மாணவியின் புகை படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில், 
காதலை முறித்து கொண்டதால் மாணவியின் புகை படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
இன்ஸ்டாகிராம் காதல்
திற்பரப்பு அருகே உள்ள செம்மங்காலவிளையை சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மகன் அஜித் (வயது 21), பி.பி.ஏ.பட்டதாரி. இவருக்கும் தக்கலை பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவிக்கும் இடையே சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த பழக்கம் காதலாக மாறியதாக தெரிகிறது. இருவரும் நெருக்கமாக பழக தொடங்கினர்.
இந்தநிலையில் அவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் அஜித்தின் நடவடிக்கைகள் சரியில்லாததால் அந்த மாணவி அவரை விட்டு விலகி சென்றார்.
கைது
இதனால் ஆத்திரமடைந்த அஜித், மாணவியின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனை பார்த்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். 
இதுகுறித்து மாணவி தரப்பில் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அஜித்தை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story