நாகர்கோவிலில் டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்கள் திருட்டு

நாகர்கோவிலில் டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்கள் திருட்டு
x
தினத்தந்தி 26 April 2022 2:06 AM IST (Updated: 26 April 2022 2:06 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்கள் திருட்டு

நாகர்கோவில், 
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமார்த்தலிங்கபுரம் நாடான்குளம் அருகில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் சூப்பர்வைசராக மோகன் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று மதியம் கடையை திறக்க வந்தபோது கடையின் சுவரில் துளை போட்டு 65 மதுபாட்டில்களை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மோகன் வடசேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, மதுபாட்டில்களை திருடிச் சென்ற திருடர்களை தேடி வருகின்றனர். திருடப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.11 ஆயிரத்து 700 ஆகும்.

Next Story