துப்புரவு பணியாளர்கள் குறைகேட்பு முகாம்


துப்புரவு பணியாளர்கள் குறைகேட்பு முகாம்
x
தினத்தந்தி 26 April 2022 2:12 AM IST (Updated: 26 April 2022 2:12 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் குறைகேட்பு முகாம் நடந்தது.

எடப்பாடி:-
எடப்பாடி நகராட்சியில் துப்புரவு பணியாளர்களிடம் குறைகேட்பு முகாம் நடந்தது.  நகராட்சி தலைவர் பாஷா தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் சேகர், பொறியாளர் சரவணன், மாவட்ட பரப்புரையாளர் ராஜேஸ்வரி, சுகாதார அலுவலர் முருகன், மேலாளர் (பொறுப்பு) சேரலாதன், குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் கூறும்பொழுது, நகராட்சி பகுதிகளில்  பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தருவதில்லை என்றனர். நகராட்சி தலைவர் பாஷா பேசுகையில், குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது குறித்து அனைத்து வார்டுகளிலும், நகராட்சி உறுப்பினர்கள் மூலம், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

Next Story