புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்
சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவிக்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஓமலூர்:-
சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவிக்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல்
அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் கிளை, ஒன்றிய, பேரூர், நகர நிர்வாகிகளுக்கான தேர்தல் ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. மேலும் அதன் புதிய நிர்வாகிகளை அ.தி.மு.க. தலைமை அறிவித்தது.
இந்த நிலையில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று காலை சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளர்களாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான அர்ஜுனன், நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கப்பச்சி வினோத் ஆகியோர் செயல்பட்டனர். அவர்களிடம் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிட கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவைத்தலைவர்
இதேபோல் புறநகர் மாவட்ட அவைத்தலைவர் பதவிக்கு ஏ.டி.அர்ஜூனன், இணை செயலாளர் பதவிக்கு ஈஸ்வரி, துணை செயலாளர்கள் பதவிக்கு தங்கமணி, பொன்.தனபாலன், பொருளாளர் பதவிக்கு ஜெகதீஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு வெங்கடாசலம், மல்லிகா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும் செயற்குழு உறுப்பினர்கள் பதவி உள்பட மொத்தம் 26 பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் செம்மலை, சந்திரசேகரன் எம்.பி., புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் மணி, ராஜமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பல்பாக்கி கிருஷ்ணன், வெற்றிவேல், ஓமலூர் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அசோகன், கோவிந்தராஜ், காடையாம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் சேரன் செங்குட்டுவன், சுப்பிரமணியம், தாரமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமுத்துஉள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story